- by Editor
- 5 months ago
ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற ருமேஷ் தரங்கவுக்கு ஜனாதிபதி வாழ்த்து
2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற இலங்கை வீரர் ருமேஷ் தரங்க பத்திரகேவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ருமேஷ் தரங்கவின் சாதனையைப் பாராட்டியுள்ளார்.
அதில், “பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் நீங்கள் வென்ற தங்கப் பதக்கம் நாடு காணும் பொன்னான கனவை நனவாக்கிய பெருமிதம்! ருமேஷ் தரங்க, உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!” என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ள இந்த வெற்றி, நாட்டின் விளையாட்டுத் துறைக்கு முக்கியமான சாதனையாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.