- by Editor
- 1 year ago
இஸ்ரேலில் மாயமான இலங்கையர் பணயக் கைதியாகத் தடுத்து வைப்பு
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
இஸ்ரேல் - ஹமாஸ் மோதலால் காணாமல்போனார் எனக் கூறப்பட்ட இலங்கையரான சுஜித் பண்டார யட்டவர, ஹமாஸ் அமைப்பினரால் பணயக் கைதியாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது என்று இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது என்று இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் - ஹமாஸ் மோதலால் சுஜித் பண்டார யட்டவர, கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி முதல் காணாமல்போயுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரது பிள்ளைகளின் மரபணு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அவரை விடுவிப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
வென்னப்புவவைச் சேர்ந்த சுஜித் பண்டார யட்டவர இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.