Saturday, October 10, 2026

இஸ்ரேலிலிருந்து - இலங்கை வர விரும்பும் இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்பு!


இஸ்ரேலிலிருந்து - இலங்கை வர விரும்பும் இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்பு!

இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கிடையிலான யுத்தமானது வீரியம் கொண்டுள்ள நிலையில், இஸ்ரேலில் இருந்து இலங்கை வர விரும்பும் இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

இஸ்ரேலில் இருந்து எகிப்து வழியாக இலங்கைக்கு பயணிக்க விரும்பும் இலங்கையர்களுக்கு, விசா வழங்க இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் முடிவு செய்துள்ளது. அத்தகைய ஆவணங்கள் தேவைப்படும் இலங்கையர்கள் தங்கள் கடவுச்சீட்டுகள் மற்றும் விசாக்களுடன் இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு வருமாறு தூதரகம் அறிவித்துள்ளது.

செல்லுபடியாகும் இஸ்ரேலிய விசாக்களை வைத்திருக்கும் இலங்கையர்களுக்கு எகிப்து வழியாக பயணிக்க 96 மணிநேர விசா வழங்கப்படுவதாகவும், இதற்காக 50 அமெரிக்க டொலர் கட்டணம் வசூலிக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

you may also like