Saturday, October 10, 2026

இவ்வருட இறுதிக்குள் ஜனாதிபதித் தேர்தல்! - ரணில் உறுதி


இந்த வருட இறுதிக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாகவுள்ளார் என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

"பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதில்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றார். தேர்தல் தொடர்பான நகர்வுகள் இரண்டாம் பட்சமானவைதான். ஆனால், எதிர்வரும் ஒக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும். இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தலை ஜனாதிபதி நடத்தியே தீருவார்." - என்றார்.

you may also like