- by Editor
- 1 year ago
இலங்கை 290 ஓட்டங்களுக்கு ஆட்டமிழப்பு
-
- by Editor,
- 1 month ago
- in விளையாட்டு செய்திகள்
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
போட்டியில் தனது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, சற்றுமுன்னர் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 290 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணிக்காக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய சொனால் தினுஷ, தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்து 103 ஓட்டங்களை பெற்றார். அதேவேளை, பசிந்து சூரிய பண்டார 80 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் பிரசித் கிருஷ்ணா மற்றும் மானவ் சுதார் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
முன்னதாக, தனது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 503 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது.
இதன்படி, இந்திய அணி இலங்கை அணியை விட 213 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.