Thursday, October 8, 2026

இலங்கை - பங்களாதேஷ் : இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று!


இலங்கை - பங்களாதேஷ் : இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று!

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆர். பிரேமதாச மைதானத்தில் பகல் - இரவு போட்டியாக நடைபெற உள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது போட்டியில் இலங்கை அணி சிறப்பானதொரு வெற்றியை பதிவுச் செய்திருந்த நிலையில், இரண்டாவது போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றும் குறிக்கோளுடன் இலங்கை அணி களமிறங்கும்.

அதேவேளை, முதலாவது போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முகமாகவும், தொடரை தக்கவைத்துக்கொள்ளும் முனைப்போடும் பங்களாதேஷ் அணியும் களமிறங்கும்.

எனவே, இன்றைய போட்டியில் விறுவிறுப்பிற்கு பஞ்சமிருக்காது.


you may also like