- by Editor
- 2 years ago
இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்
-
- by Editor,
- 2 years ago
- in இந்திய செய்திகள்
தமிழகத்தின் நாகப்பட்டினம் - செருதூர் கிராம மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாகப்பட்டினம் - செருதூர் கிராமத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதலில் காயமடைந்துள்ளார் என தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன், சுமார் இரண்டு லட்சம் இந்திய ரூபா பெறுமதியான வலைகளும் இதன்போது சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
காயமடைந்த தமிழக மீனவர் நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.