Saturday, October 10, 2026

இலங்கையில் விற்கப்படும் சீன பெரிய வெங்காயம்


சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தை புறக்கோட்டை மொத்த வியாபார சந்தையில் முதல் முறையாக வாங்க முடியும் என இறக்குமதியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சீன வெங்காயத்தின் ஒரு கிலோவின் மொத்த விலை 320 ரூபா எனவும் இந்த வெங்காயம் நல்ல நிலையில் காணப்படுவதாகவும் கூறுகின்றனர்.

இந்தியாவும் பாகிஸ்தானும் பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்ததையடுத்து, இலங்கையில் இறக்குமதியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகினர் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்தே இறக்குமதியாளர்கள் மற்றும் மொத்த வியாபாரிகள் சீனாவிலிருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய ஆரம்பித்ததுடன் நேற்று முதல் புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் சீன பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்படுவதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால், பண்டிகைக் காலங்களில் வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்றும் நுகர்வோர் தங்களுக்குத் தேவையான வெங்காயத்தை தட்டுப்படின்றி பெற்றுக் கொள்ளலாம் என்றும் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.  

you may also like