- by Editor
- 2 months ago
இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன
-
- by Editor,
- 8 months ago
- in இலங்கை செய்திகள்
இலங்கையின் புதிய கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று (5) தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் அவர் தமது கடமைகளை பொறுப்பேற்றிருந்தார்.
இலங்கையின் 42-வது கணக்காய்வாளர் நாயகமாகப் பதவியேற்றுள்ள அவர், இந்த பதவிக்கு தெரிவான முதல் பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
சமுதிகா ஜயரத்ன, வங்கி, நிதி, காப்புறுதி, வரி, திறைசேரி சேவைகள் மற்றும் கடன் முகாமைத்துவம் ஆகியவற்றில் அனுபவம் வாய்ந்தவராவார்.