Sunday, October 11, 2026

இலங்கைக்குக் கடத்த போதை மாத்திரைகளுடன் ஒருவர் இந்தியாவில் கைது


இலங்கைக்குக் கடத்த முற்பட்ட பெருந்தொகையான போதை மாத்திரைகளுடன் ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியக் கடலோரப் பொலிஸார் முன்னெடுத்த சோதனையின்போது, அந்த நபர் பெரிய பட்டினம் கடற்கரை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, அவரிடம் இருந்து 7 இலட்சம் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் அவர் பயணித்த படகும் ஒன்றும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.


you may also like