- by Editor
- 2 years ago
இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 1,500 கிலோ பீடி இலைகள் சிக்கின
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
இந்தியாவின் தூத்துக்குடி கடற்கரையில் இருந்து படகு மூலம் இலங்கைக்குக் கடத்த முற்பட்ட பீடி இலை பண்டல்களைத் தமிழகப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்துநகர் பொலிஸ் நிலைய எல்லைப் பரப்பில் பொலிஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது தாளமுத்துநகர் கடற்கரையில் இருந்து இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த பீடி இலைகள் அடங்கிய 40 பண்டல்களை மீட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட 40 மூடைகளிலும் 1,500 கிலோ பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றை ஏற்றி வந்த நான்கு சக்கர வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.