- by Editor
- 1 year ago
இரண்டு நாட்களில் அதிவேக வீதிகள் மூலம் ரூ.124.5 மில்லியன் வருமானம்
-
- by Editor,
- 1 month ago
- in இலங்கை செய்திகள்
கடந்த ஓகஸ்ட் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் அதிவேக வீதிகளைப் பயன்படுத்திய வாகனங்கள் மூலம் 124,574,925 ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
குறித்த இரண்டு நாட்களிலும் ஒட்டுமொத்த அதிவேக வீதி வலையமைப்பிலும் 325,316 வாகனங்கள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் 26 ஆம் திகதி மாத்திரம் 163,763 வாகனங்கள் அதிவேக வீதிகளைப் பயன்படுத்தியுள்ளதுடன், அன்றைய தினம் 60,409,995 ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
அதேவேளை, ஓகஸ்ட் 27 ஆம் திகதி 161,553 வாகனங்கள் அதிவேக வீதிகளில் பயணித்துள்ளதுடன், அன்றைய தினம் 64,164,930 ரூபாய் வருமானமாகப் பெறப்பட்டுள்ளது.
இந்த இரண்டு நாட்களிலும் தெற்கு அதிவேக வீதி (E01) மற்றும் வெளிவட்ட அதிவேக வீதி (E02) ஆகியவற்றிலேயே அதிகளவிலான வாகனப் போக்குவரத்து பதிவாகியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.