Saturday, October 10, 2026

இரகசியம் - பரகசியம் (17.3.2025)


இன்று என் பத்தியில் வருவது என் சொந்தச் சரக்கு அல்ல. முகப் புத்தகத்தில் சுட்டது.

வாசிப்பதற்கு விடயம் பொதிந்ததாகத் தெரிந்தது, அதனால் வாசகர்களுடன் அதனைப் பகிரலாம் என்று கருதினேன். அத்ய் இதுதான்:-

தாங்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தால் -

# மத்திய வங்கி கொள்ளை புகழ் அர்ஜுன் மகேந்திரனை 24 மணி நேரத்தில் நாட்டுக்கு கொண்டு வருவோம் என்று சொன்னார்கள்.

# உகண்டாவிற்குக் கொண்டு சென்ற காசைத் திரும்ப எம் நாட்டுக்கு கொண்டு வருவோம் என்று சொன்னார்கள்.

# ராஜபக்‌ஷவை வீட்டை விட்டுக் கலைப்போம் என்றார்கள்.

# எரிபொருள் விலையைக் குறைப்போம் என்றார்கள்.

# ஊழல்வாதிகளை ஒழிப்போம் என்றார்கள்.

# தாஜுதீன் கொலைக் குற்றவாளியை கைது செய்வோம் என்றார்கள்.

# ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சூத்திரதாரியைக் கைது செய்வோம் என்றார்கள்.

# பார் பெர்மிட் எடுத்தவர்கள் பெயர் விவரம் வெளியிடுவோம் என்றார்கள்.

# அரிசிக்குக் கட்டுப்பட்டு விலை என்றார்கள்.

# VITZ கார் ரூ.12 இலட்சத்தில் கொண்டு வந்து தருவோம் என்றார்கள்.

# தங்களிடம் 500 பைல்கள் (கோவைகள்) இருக்கின்றன என்றார்கள்.

ஆனால் இப்போது -

# செவ்வந்தியையும் காணோம்,தேசபந்துவையும் கணோம்.

# இப்போது உள்ளூராட்சித் தேர்தலுக்கான புதிய வெளியீடு பட்டலந்த அறிக்கை

'இப்ப தானே வந்திருக்கிறோம். உடன பிள்ளை பெற முடியுமா?' என்று கேட்டார்கள். பிள்ளை பெறக் கூட 9 மாதங்கள் தேவைதானே...! இன்னும் பொறுத்திரு என்கிறார்கள். அதுக்குள்ளே எல்லா சபைகளையும் கைப்பற்றுவோம் என்று உளறுகிறார்கள். கேட்கிறவன் கேனையனா இருந்தா ….?

- என்று முடிகின்றது அந்த முகப்புத்தக விமர்சனப் பதிவு...!

அநுர குமார திஸ்நாயக்கா ஜனாதிபதியாகப் பொறுப்பேற்று அடுத்து வரும் சில தினங்களில் ஆறு மாதங்கள் பூர்த்தியாகப் போகின்றன.

அவரின் தனித்துவச் சாதனை என்று பேசுவதற்கு இந்த ஆட்சியில் ஏதுமில்லை என்பதுதான் கள யதார்த்தமாகும்.

you may also like