Wednesday, October 7, 2026

இன்று வெப்பம் அதிகரிக்கும் - வடக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை


நாட்டின் சில பகுதிகளில் இன்று(03) வெப்பமான வானிலை நிலவக்கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஊவா மாகாணத்தின் மொணராகலை மாவட்டத்திலும் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பக் குறியீடு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து, ‘எச்சரிக்கை மட்டம்’ வரை செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து, பொதுமக்கள் வெப்பமான காலநிலையிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக, போதுமான அளவு நீர் அருந்துதல், நேரடியாக வெயிலில் இருப்பதை முடிந்தவரை தவிர்த்தல் மற்றும் நாளின் அதிக வெப்பமான நேரங்களில் வெளிப்புறச் செயற்பாடுகளை மட்டுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், வெப்பமான வானிலையால் ஏற்படக்கூடிய உடல்நலப் பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில் சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் நீண்ட நேரம் வெளிப்புறங்களில் பணியாற்றுவோர் கூடுதல் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

you may also like