Thursday, October 8, 2026

இன்று முதல் தாய்ப்பால் வாரம் பிரகடனம்


உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, இன்று (01) முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை நாட்டில் 'தாய்ப்பால் வாரம்' பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக குடும்ப நலப் பணியகத்தின் குழந்தை போசாக்குப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் ஹிரண்யா ஜெயவிக்ரம தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தாய்ப்பாலின் முக்கியத்துவம், குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தில் அதன் பங்களிப்பு தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், தாய்ப்பால் வழங்குவதன் நன்மைகள் குறித்து தெளிவுபடுத்துவதுமே இந்த வாரத்தின் பிரதான நோக்கமாகும் என அவர் தெரிவித்தார்.

மேலும், குழந்தைகளின் சிறந்த போசாக்கு மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக தாய்ப்பால் வழங்கலை ஊக்குவிப்பது தொடர்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

you may also like