Saturday, October 10, 2026

இன்று பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்!!


இன்று பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்!!

பாராளுமன்றம் இன்று 9.30 ஆரம்பமாகியுள்ளது. இன்று முதல் (22) முதல் 25 ஆம் திகதி வரை கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.

இன்றைய அமர்வில் ஊழியர்களுக்கான பாதீட்டு நிவாரண கொடுப்பனவு திருத்த மசோதா மற்றும் ஊழியர்களுக்கான தேசிய குறைந்தபட்ச ஊதிய திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிறுவனங்கள் திருத்த மசோதா மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் நாளை (23) நடைபெற உள்ளது, இலங்கை மின்சார திருத்த மசோதா மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் நாளை மறுநாள் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

you may also like