Thursday, October 8, 2026

இன்று சென்னை வருகிறார் மோடி


பிரதமர் மோடியின் இன்றைய சென்னை வருகையை முன்னிட்டு சென்னை பெருநகர பொலிஸ் சார்பில் 15,000 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை பெருநகர பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பொலிஸார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 4) சென்னை, நந்தனம், வை.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

பிரதமரின் சென்னை வருகையை முன்னிட்டுச் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வது குறித்து, சென்னை பெருநகர பொலிஸ் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், தலைமையில், கூடுதல் பொலிஸ்ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள் மற்றும் துணை ஆணையாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

சென்னை பெருநகர பொலிஸ் ஆணையர் உத்தரவின் பேரில் சென்னை பெருநகர பொலிஸ் கூடுதல் ஆணையர்கள், பொலிஸ் இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து மற்றும் சிறப்பு பிரிவுகளின் பொலிஸ் அதிகாரிகள், ஆளுநர்கள், ஆயுதப்படை, கமாண்டோ, தமிழ்நாடு சிறப்பு பொலிஸ் படை, பொலிஸ் ஆளுநர்கள் உள்பட 15,000 பொலிஸ் அதிகாரிகளுடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரதமரின் நிகழ்ச்சி நடைபெறும் சென்னை, நந்தனம், வை.எம். சி.ஏ. மைதானம், சென்னை விமான நிலையம், மற்றும் சுற்றுப்புறங்களிலும், சென்னை செல்லும் வழித்தடங்களிலும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றன. - என்றுள்ளது.

you may also like