Saturday, October 10, 2026

இந்தியாவுடன் - எல்லை நிர்ணய பேச்சுவார்த்தை நடத்த தயார் : சீனா தெரிவிப்பு!


இந்தியாவுடன் - எல்லை நிர்ணய பேச்சுவார்த்தை நடத்த தயார் : சீனா தெரிவிப்பு!

சீனாவில் சமீபத்தில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், சீன அமைச்சர் டோங் ஜூன் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

இதன்போது இரு தரப்பு எல்லை பிரச்சினையை தீர்க்கவும், இரு நாட்டு உறவை மேம்படுத்தவும் 4 அம்சங்கள் கொண்ட திட்டங்களை இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் பரிந்துரைத்தார்.

இந் நிலையில் இந்தியாவுடன் எல்லை பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக சீன வெளியுறவு துறை அமைச்சரக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கிடையிலான எல்லை நிர்ணயம் மற்றும் முகாமைத்துவம் தொடா்பாக இந்தியாவுடன் தொடா்ந்து பேச்சுவார்த்தைக்கு சீனா எப்போதும் தயாராக உள்ளது. இதன் மூலம் இரு தரப்பும் சோ்ந்து எல்லையில் அமைதியை உறுதிப்படுத்தவும், எல்லை தாண்டிய ஒத்துழைப்புக்களை ஊக்குவிக்கவும் முடியும். என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


you may also like