Saturday, October 10, 2026

இந்தியாவுடன் - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்!


இந்தியாவுடன் - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்!

அமெரிக்கா விரைவில் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் என அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

சீனாவுடன் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்ட நிலையில், “நாம் இப்போதுதான் சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளோம். நாங்கள் எல்லோருடனும் ஒப்பந்தம் செய்துகொள்ளப்போவதில்லை. அதேவேளை, சிறந்த ஒப்பந்தங்கள் எங்கள் கைவசம் உள்ளன. அவற்றில் ஒன்று விரைவில் தெரியவரும்; அது இந்தியாவுடனான ஒப்பந்தமாக இருக்கலாம், இந்தியாவுடனான ஒப்பந்தம் மிகப் பெரிய ஒப்பந்தமாகும்,” என்று டிரம்ப் கூறியுள்ளார்.

இதேவேளை அனைத்து உலக நாடுகளுடனும் அமெரிக்கா நல்ல உறவை ஏற்படுத்தியுள்ளது. என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


you may also like