- by Editor
- 2 years ago
இதுவரை கூட்டணி அமைப்பதற்கு முடியாமல் தவிக்கும் தே.மு.தி.க.
-
- by Editor,
- 8 months ago
- in இந்திய செய்திகள்
சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகவுள்ள சூழலில், இதுவரையிலும் கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் தவித்து வருகிறது தே.மு.தி.க.
தே.மு.தி.க. கடைசியாக மக்கள் பிரதிநிதிகளை அனுப்பியது 2011 சட்டப்பேரவைத் தேர்தல்தான். அதன்பின்னர் பல அணிகள் மாறி மாறி கூட்டணி அமைத்தாலும், ஒரு இடத்திலும் அக்கட்சியால் வெல்ல முடியவில்லை. 2024 தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் கடைசி நேரத்தில் சேர்ந்து 5 தொகுதிகளில் போட்டியிட்டது தே.மு.தி.க. அந்த கூட்டணியே தோல்வியடைந்த நிலையில், விருதுநகரில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் மட்டும் வெற்றியின் விளிம்பு வரை சென்று தோல்வியடைந்தார்.
அதன்பின்னரும் அ.தி.மு.கவோடு நல்லுறவுதான் தே.மு.திகவுக்கு இருந்தது. ஆனால், ராஜ்யசபா சீட் கொடுக்காத விரக்தியில் அ.தி.மு.கவுடனான உறவை துண்டித்து, தி.மு.க. பக்கமும் துண்டு போட ஆரம்பித்தது தே.மு.தி.க. அதனால், இரு அணிகளிடம் கூட்டணி அமைக்கும் வகையில் கதவுகளை திறந்துவைத்தார் பிரேமலதா.
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், தி.மு.கவும், அ.தி.மு.கவும் தங்கள் கூட்டணியை கிட்டத்தட்ட இறுதி செய்துவிட்டது. கொஞ்சம் முரண்டுபிடித்த அன்புமணியையும், தினகரனையும் கூட்டணி மேடையில் ஏற்றினார் பிரதமர் மோடி. அப்போது எப்படியும் தே.மு.தி.க, என்.டி.ஏ. கூட்டணியில் இணைக்கப்படும் என்ற பேச்சு நிலவியது. ஆனால், எங்களிடம் யாரும் கூட்டணி பேச்சுவார்த்தையே நடத்தவில்லை என்று பிரேமலதா தெரிவித்தார்.
தே.மு.தி.க. 2011ல் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சியாக இருந்தது. ஒரு கட்டத்தில் தமிழகத்தின் மாற்று சக்தியாக விஜயகாந்த் பார்க்கப்பட்டார். ஆனால், அந்த காலமெல்லாம் இப்போது மாறிவிட்டது. இருந்தாலும், பிரேமலதாவும், அவரின் மகன் விஜய பிரபாகரனும் அதே மனநிலையில்தான் உள்ளனர் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
இதனை மனதில் வைத்துக்கொண்டு எடுத்த எடுப்பிலேயே 20 சட்டப்பேரவை தொகுதிகள், ஒரு ராஜ்யசபா ஆசனம் என்ற நிபந்தனையுடன் பேச்சுவார்த்தையையே தொடங்குகிறதாம் தே.மு.தி.க.. அதனால்தான், முதற்கட்ட பேச்சுவார்த்தையோடே இரு பெரும் கட்சிகளும் வெளியேறிவிட்டன .