Thursday, October 8, 2026

இணையவழி சூதாட்டத்துக்கு முழுத் தடை - புதிய சட்டமூலம் அமுலுக்கு


இந்தியாவில் இணைய விளையாட்டுகளால் (online Gaming) ஏற்படும் பண இழப்பு மற்றும் உயிர்மாய்ப்புக்களை தடுக்கும் நோக்கில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள "இணையவழி சூதாட்டத்தை ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டம் - 2025" (PROG Act) எதிர்வரும் மே மாதம் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது.

இந்தச் சட்டத்தின் கீழ் சூதாட்டத்திற்குத் தடை,பணத்தைப் பணயம் வைத்து விளையாடப்படும் இணைய விளையாட்டுகளுக்கு இனி அனுமதி இல்லை.

அவை முற்றாகத் தடை செய்யப்படும்.

இதேவேளை சதுரங்கம் போன்ற இணைய விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு விளையாட்டுகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

விளையாட்டுகளைக் கண்காணிக்க மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் புதிய ஆணையம் அமைக்கப்படும்.

ஒரு விளையாட்டு சட்டப்படி இயங்குகிறதா என்பதை இந்த ஆணைக்குழு 90 நாட்களுக்குள் ஆய்வு செய்து தீர்மானிக்கும்.

இந்தியாவில் நடத்தப்படும் அனைத்து இணைய விளையாட்டுகளும் இந்த ஆணைக்குழுவில் பதிவு செய்யப்படுவது இனி கட்டாயமாகும்.

இதேவேளை இணைய விளையாட்டு நிறுவனங்கள் வயது வரம்பைச் சரிபார்த்தல்,குறிப்பிட்ட நேரம் மட்டுமே விளையாடும் வசதி,பிள்ளைகளைக் கண்காணிக்க விசேட வசதி,விளையாட்டிற்கு அடிமையானவர்களுக்கு ஆலோசனைகளை (Counseling) வழங்குதல் ஆகிய வசதிகளைக் கண்டிப்பாக வழங்க வேண்டும்.

விளையாட்டின் போது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், முதலில் அந்த நிறுவனத்திடம் புகாரளிக்க வேண்டும்.

அங்கு தீர்வு கிடைக்காவிடின், 30 நாட்களுக்குள் இணைய விளையாட்டு ஆணைக்குழுவிடம் மேன்முறையீடு செய்யலாம்.அதிலும் திருப்தி இல்லையெனில் தகவல் தொழில்நுட்ப செயலாளரை அணுக முடியும்.

மக்களின் பணம், மனநலம் மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்தச் சட்டத்தின் பிரதான நோக்கம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


you may also like