Wednesday, October 14, 2026

இடைத்தேர்தலுக்கு முன் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தாது - ட்ரம்ப் அறிவிப்பு


எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கு முன்னர், எந்தச் சந்தர்ப்பத்திலும் அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கருத்தை அவர் தனது ‘ட்ருத் சோஷியல்’ (Truth Social) சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், ஈரான் மீதான தடைகள் தொடர்ந்து அமுலில் இருக்கும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

you may also like