Sunday, October 4, 2026

அருந்திக பெர்னாண்டோவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு


முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தற்போது வாக்குமூலம் பதிவு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

டுபாயிலிருந்து அண்மையில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாகக் கூறப்படும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் ஒரு பகுதியாகவே இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது, அருந்திக பெர்னாண்டோவின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான விடயங்கள் குறித்தும் விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

you may also like