Wednesday, October 7, 2026

அரச ஊழியர்களின் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு: வரவு - செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி அறிவிப்பு


அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவை 10,000 ரூபாவால் அதிகரிப்பதாக இன்றைய வரவு - செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்தார்.

அதற்கமைய அடுத்த வருடம் ஜனவரி முதல் அரச ஊழியர்களின் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 17,800 ரூபாவாக வழங்கப்படவுள்ளது.

எவ்வாறாயினும், அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபா ஏப்ரல் மாத சம்பள உயர்விலிருந்தே அரச ஊழியர்களுக்கு கிடைக்கவுள்ளது.

ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையான கொடுப்பனவான 30,000 ரூபா நிலுவை தொகை ஏப்ரல் மாத கொடுப்பனவுடன் சேர்த்து வழங்கப்படும்.

அதன் பின்னர் மாதாந்தம் 10,000 ரூபா கொடுப்பனவு கிரமமாக வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

you may also like