- by Editor
- 2 years ago
அமெரிக்கா - சீனாவுக்கு சுனாமி எச்சரிக்கை!!
-
- by Editor,
- 1 year ago
- in உலக செய்திகள்
அமெரிக்கா - சீனாவுக்கு சுனாமி எச்சரிக்கை!!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் , பசுபிக் பெருங்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள 8.8 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு ஹவாயிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
- இதுதொடர்பாக ட்ரம்ப் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,
"பசுபிக் பெருங்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, ஹவாயில் வசிப்பவர்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அலாஸ்கா மற்றும் அமெரிக்காவின் பசுபிக் கடற்கரைக்கு சுனாமி கண்காணிப்பு அமுலில் உள்ளது. ஜப்பானுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்!" என்று கூறியுள்ளார்.
தற்போது, கலிபோர்னியாவிலும், சீனாவின் ஷாங்காயை உள்ளடக்கிய கிழக்கு கடற்கரை பகுதியிலும் சுனாமி தாக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.