- by Editor
- 1 year ago
அமெரிக்கத் தூதுவருடன் மனோ குழு இன்று சந்திப்பு
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தலைமையிலான குழுவினருக்கும், மனோ கணேசன் எம்.பி. தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் மலையக சிவில் சமூக தூதுக்குழுவுக்கும் இடையில் காத்திரமான சந்திப்பு இன்று கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் நடைபெற்றது.
இதன்போது, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். உதயகுமார் மற்றும் த.மு.கூ./ஜ.ம.மு. களுத்துறை மாவட்ட அமைப்பாளர் அன்டன் ஜெயசீலன் மற்றும் சிவில் சமூகம் சார்பில் பெ.முத்துலிங்கம், பேராசிரியர் மற்றும் ம.ம.மு. பொது செயலாளர் விஜயசந்திரன், பேராசிரியர் சந்திரபோஸ், பேராசிரியர் ரமேஷ் ராமசாமி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அமெரிக்கத் தரப்பில், தூதுவருடன் அரசியல் அலுவலர் அடம் மிசெலோ, யூஎஸ்எய்ட் வேலை திட்ட முகாண்மை விசேட அலுவலர்கள் ஜனக விஜயசிறி, ரெஹானா கட்டிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.