- by Editor
- 2 years ago
அமிர்தலிங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வு
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று நடைபெற்றது.
பன்னாகம் கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் பன்னாகம் அண்ணா கலைமன்றம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்றலில் அமைக்கப்பட்டுள்ள அமிர்தலிங்கத்தின் திருவுருவச் சிலையின் முன்றலில் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஈகைச்சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு திருவுருவச் சிலைக்கு மலர் மாலையும் அணிவிக்கப்பட்டது.
நினைவேந்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளைத் தலைவருமான ஈஸ்வரபாதம் சரவணபவன், திருமதி யசோதா சரவணபவன், வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் நாகரஞ்சினி ஐங்கரன், முன்னாள் வலிகாமம் மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான ஜெயந்தன், கௌரி காந்தன், முன்னாள் யாழ். மாநகர சபை உறுப்பினர் முகுந்தன், பன்னாகம் அண்ணா கலை மன்றத்தினர், பன்னாகம் கிராம அபிவிருத்தி சங்கத்தினர், பன்னாகம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.