- by Editor
- 1 year ago
அனைத்து அரச நிறுவனங்களிலும் புதிய டிஜிட்டல் அபிவிருத்திப் பிரிவுகள்
-
- by Editor,
- 4 weeks ago
- in இலங்கை செய்திகள்
இலங்கையின் 2025–2030 தேசிய டிஜிட்டல் பொருளாதார உத்தியை நடைமுறைப்படுத்தும் நோக்கில், அரசாங்க நிறுவனங்கள் அனைத்திலும் டிஜிட்டல் அபிவிருத்திப் பிரிவுகளை நிறுவுவதற்கு அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
2025 அக்டோபர் 21ஆம் திகதி தேசிய டிஜிட்டல் பொருளாதார உத்திக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய டிஜிட்டல் அபிவிருத்திப் பிரிவுகள், ஒவ்வொரு அரச நிறுவனத்திலும் முன்னெடுக்கப்படும் டிஜிட்டல் உருமாற்றத் திட்டங்களை ஒருங்கிணைப்பதுடன், அவற்றின் செயலாக்கத்தையும் கண்காணிக்கும்.
இதற்கமைய, ஒவ்வொரு அரச நிறுவனமும் தனது டிஜிட்டல் உருமாற்ற நடவடிக்கைகளுக்கு தலைமைத்துவம் வழங்கும் வகையில் பிரதம டிஜிட்டல் அதிகாரி (Chief Digital Officer – CDO) ஒருவரை நியமிக்கவுள்ளது.
இந்த டிஜிட்டல் அபிவிருத்திப் பிரிவுகள், GovTech ஸ்ரீலங்கா உருவாக்கும் குறிப்பு கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு நிறுவப்படவுள்ளன.
அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதுடன், தேசிய டிஜிட்டல் பொருளாதார உத்தியை நடைமுறைப்படுத்துவதில் ஈடுபட்டுள்ள அரச நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்துவதும் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
தத்தமது பிரதம டிஜிட்டல் அதிகாரிகளின் வழிகாட்டுதலின் கீழ், சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் டிஜிட்டல் அபிவிருத்திப் பிரிவுகளை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளன. இதற்காக GovTech ஸ்ரீலங்காவுடன் நெருக்கமாக இணைந்து செயற்படவும் அவை நடவடிக்கை எடுக்கவுள்ளன.
2025–2030 தேசிய டிஜிட்டல் பொருளாதார உத்தியுடன் இணங்க இந்தத் திட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்குத் தேவையான நிறுவன ரீதியான பொறிமுறைகளும் ஏற்படுத்தப்படும் என அமைச்சரவை முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.